Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

அபாயத்தில் 40 கோடி மக்கள் – உலகத்தை தாக்க இருக்கும் இன்னொரு பேரபாயம் மற்றும் பிற செய்திகள்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

அபாயத்தில் 40 கோடி மக்கள் – உலகத்தை தாக்க இருக்கும் மற்றொரு பேரபாயம்

ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் 1990களில் உருகியதைவிட ஆறு மடங்கு அதிகமாக உருகுவதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது. புவி வெப்பமயமாதலால் 1992 – 2017 இடையிலான காலகட்டத்தில் மட்டும் 6.4 டிரில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகி உள்ளன.

அபாயத்தில் 40 கோடி மக்கள் - உலகத்தில் தாக்க இருக்கும் மற்றொரு பேரபாயம்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இதன் காரணமாக 17.8 மி.மீ அளவுக்குக் கடல்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடருமானால் 2100ஆம் ஆண்டுக்குள் 40 கோடி மக்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஐஸ் ஷீட் மாஸ் பேலன்ஸ் இன்டர்கம்பரிசன் திட்டம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Presentational grey line

கொரோனா: மலேசியாவில் ஒரே நாளில் 190 புது நோயாளிகள்

கொரோனா: மலேசியாவில் ஒரே நாளில் 190 புது நோயாளிகள்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

மலேசியாவில் இன்று ஒரே நாளில் 190 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 428ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும் சந்தேக நபர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதும் கண்காணிப்பதும் தீவிரமடைந்துள்ளது.

நடிகர் விஜய்: “சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது”

"சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது"படத்தின் காப்புரிமை SUN TV

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேசிய நடிகர் விஜய் “மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது” என்று கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே சமூக ஊடகங்கள் விஜய் ரசிகர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. மாஸ்டர் திரைப்படம், விஜய் என ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வந்தன.

கொரோனா வைரஸ்: உலகத்தில் ஒரே நாளில் 424 பேர் பலி, 9750 பேருக்கு தொற்று

கொரோனா வைரஸ்: உலகத்தில் ஒரே நாளில் 424 பேர் பலி, 9750 பேருக்கு தொற்றுபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

கொரோனா வைரஸ் தொற்று ஒரே நாளில் புதிதாக 12 நாடுகளுக்கு பரவியிருப்பதாகவும், புதிதாக 9,769 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், புதிதாக 438 பேர் இறந்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றாக மாறியிருப்பதாக சில நாள்களுக்கு முன்பு அறிவித்த உலக சுகாதார நிறுவனம், பிறகு இந்த தொற்றின் மையமாக ஐரோப்பா ஆகியிருப்பதாகவும் அறிவித்தது.

இலங்கையில் கர்ப்பிணி பரிசோதனை, குழந்தைகள் தடுப்பூசி பணிகளில் மாற்றம்

இலங்கையில் கர்ப்பிணி பரிசோதனை, குழந்தைகள் தடுப்பூசி பணிகளில் மாற்றம்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

8 மாதங்கள் பூர்த்தியான கர்ப்பிணித் தாய்மார்கள் மாத்திரம் பரிசோதனைகளுக்காக வருகை தருமாறும், ஏனையோர் தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் வருகை தருமாறும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கிறார்.

குறிப்பாக 8 மாதங்கள் பூர்த்தியாகாத கர்ப்பிணி தாய்மார்களின் வீடுகளுக்கு சென்று சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு சிசுக்களுக்கு ஏற்றப்படும் ஊசியை ஏற்றாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்

அது எந்தவிதத்திலும் சிசுகளுக்கு பிரச்சினையாக அமையாது எனக் கூறிய அவர், இரண்டு வாரங்களின் பின்னர் குறித்த ஊசியை ஏற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

குறித்த இடங்களுக்கு அதிக அளவிலான மக்கள் ஒன்று திரளுவதை தவிர்க்கும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மார்ச் மாதம் 10ஆம் தேதிக்கு முன்னர் இத்தாலியிலிருந்து வருகைத்தந்து, பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாதவர்களை, பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக டொக்டர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept