செய்திகள்

ஊரடங்கு சட்டத்தின் போது தப்பிச்செல்ல முயன்ற இருவர் கைது !

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளை வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி தப்பிச்செல்லமுயன்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த  இரு  இளைஞர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று மாலை  6.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் ஊரடங்கு சட்டத்தின் போது கடமையில் இருந்த பொலிஸாரின் சைகையை மீறி  இரு இளைஞர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி தப்பிசெல்ல முயன்றுள்ளனர்.

இதனையடுத்து வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் குழுவினர் குறித்த இருவரையும் துரத்திச்சென்று பூங்காவீதியில் வைத்து மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவர் மீதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்திய பின்னர் சென்றமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சைகையை மீறி பயணித்தமை, வாகனத்தை வேகமாக செலுத்தியமை போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button