செய்திகள்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 181 பேர் கைது

நாடளாவிய ரீதியில்  கடந்த வெள்ளியன்று மாலை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறிய 181 பேர் இன்று காலை 6.00 மணி வரையிலான காலபப்குதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர்  பொலிஸ் அத்தியட்சர்  சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன கூறினார்.

இவர்களில் அதிகமானோர் ஊரடங்கின் போது காரணமின்றி வீதிகளில் சுற்றித் திரிந்தோர் என அவர் கூறினார்.

அதனைவிட விளையாட்டு மைதாங்களில் ஒன்று சேர்ந்து மதுபானம் அருந்தியமை, வாகனங்களில் பயணித்தமை, உணவகம் ஒன்றினை திறந்து வைத்தமை, குடித்துவிட்டு பாதையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டமை , வர்த்தகம் செய்தமை போன்ற காரணங்களுக்காகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button