செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்தும் அவசர மருத்துவ சேவைக்காக 70 மில்லியன் ரூபாவை வழங்கிய தொழிலதிபர்

கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான அவசர மருத்துவ சேவைகளுக்காக தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 70 மில்லியன் ரூபாவை வழங்குவதாக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஆறு செயற்கை சுவாசக்கருவிகள், அவசரசிகிச்சைப் பிரிவுக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான 169 படுக்கைள் உட்பட 485 மருத்துவ படுக்கைகள் ஆகியன வழங்கப்படவுள்ளன.

மேலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னெடுத்துள்ள செயற்றிட்டங்களுக்கு தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் மேற்படி உதவித்தொகையானது முதற்கட்டமானது என்றும் அடுத்துவரும் காலப்பகுதியில் தேவைகளுக்கு ஏற்வகையில் மேலதிக உதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக தொழிலதிபர் ஒருவர் விடுத்துள்ள முதல் உதவித்தொகையை அறிவிப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button