மூக்கு மூலமாகவே வைரஸ் நுழைகின்றது என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொற்றுக்கள் வழமையாக தொண்டையின் பின்பகுதி மற்றும் மூக்கின் மூலமாகவே நுழைகின்றன என தெரிவித்துள்ள மருத்துவர் நட்டாலி மக்டமர்ட் இதன்காரணமாக வாசனை மற்றும் சுவை உணர்வு இழப்பு ஏற்படுவது இயல்பு என தெரிவித்துள்ளார்.

புதிய அறிகுறிகள் தொடர்பான ஆராய்ச்சிகள் இன்னமும் மருத்துவ சமூகத்தினர் மத்தியில் பரந்துபட்ட அளவிற்கு இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அறிகுறிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஈஎன்டி யுகே  முழுமையான பாதுகாப்பு கவசங்களை மருத்துவ பணியாளர்களிற்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது இந்த சாதனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே உள்ளன அவசர நோயாளிகளிற்கு மாத்திரம் வழங்கப்படுகின்றன என  பேராசிரியர் குமார் தெரிவித்துள்ளார்