செய்திகள்

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய ஆலோசனை

வாடிக்கையாளர்களுக்கு மேலதிக பேசும் நேரம், அவசர கடன், கட்டணம் செலுத்த மேலும் காலம் வழங்குவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பணித்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து தொலைத்தொடர்பு தொலைபேசிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் வீட்டு நிலையான தோலைபேசி மற்றும் கேபள் டிவி சேவை மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணங்களை செலுத்துவதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேபோல, முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் கடன் வசதி மற்றும் மேலதிக பேசும் நேரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button