செய்திகள்

கணைய புற்றுநோய்க்கு நிவாரணமளிக்கும் புதிய சிகிச்சை

இன்றைய திகதியில் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 25 சதவீத அளவிற்கு அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில் கணைய புற்றுநோய்க்கு டார்கெட் தெரபி என்ற சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருகிறது.

கணையப் பகுதியில் நாட்பட்ட வீக்கம், வயிற்றுப்புண், கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய், பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் தொற்றுகள், குடலிறக்கம், ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவு முறை, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் கணையத்தில் புற்றுநோய் ஏற்படுகிறது. அத்துடன் கணையத்தில் உள்ள மரபணு ஒன்றில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணம் என்றும் விவரிக்கலாம்.

மஞ்சக்காமாலை பாதிப்பு, வயிற்று வலி, பித்தப்பை அல்லது கல்லீரல் வீக்கம், தொடர் முதுகுவலி, வாந்தி, பசியின்மை, இனம் கண்டறிய இயலாத திடீரென்று எடை குறைவு போன்ற பல்வேறு அறிகுறிகளை கணையப் புற்று நோயின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.

கணையப் புற்றுநோய்க்கு ஏனைய புற்று நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் போலில்லாமல், தற்போது அறிமுகமாகியிருக்கும் டார்கெட் தெரபி என்ற சிகிச்சை மூலம் என்ற சிகிச்சை அளித்தால், கணைய புற்றுநோய் செல்கள் மேலும் பரவாமல் தடுக்கப்படும். இத்தகைய பாதிப்பு மீண்டும் வராமல் தடுக்கவும், சிலருக்கு இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட முடிகிறது.  அதனால் தற்போது கணைய புற்றுநோய்க்கு டார்கெட் தெரபி என்ற சிகிச்சை முழுமையான நிவாரணமளிக்கும் சிகிச்சையாக மாறியிருக்கிறது.

டொக்டர் நல்ல பெருமாள்.

Sources virakesari.lk

Back to top button