செய்திகள்

யாழ்ப்பாண ஆராதனையில் கலந்துகொண்ட இருவர் வவுனியா வைத்தியசலையில் அனுமதி!

யாழ்ப்பாணம், அரியாலை பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் கலந்து கொண்ட எண்மர் வவுனியாவில் அடையாளப்படுத்தப்பட்டு வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இருவர் மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நெளுக்குளத்தினைச் சேர்ந்தவருக்கும் புளியங்குளத்தை சேர்ந்தவருக்கும் வழமைக்கு மாறாக நோய்நிலைமைகள் தென்பட்டதையடுத்து, உடனடியாக பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பொதுசுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இருவரும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டு கொரோனா குறித்த மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த ஆராதனையில் பங்கேற்ற போதகரைச் சந்தித்திருந்த நபர் ஒருவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button