செய்திகள்

ஹூபே மாகாணத்துக்கான பூட்டல் நடவடிக்கையை புதன்கிழமை நீக்க தீர்மானம்!

அண்மைய நாட்களில் கொரோனாவின் தொற்று ஹூபே மாகாணத்தில் பூஜ்ஜியமாக பதிவான நிலையில் புதன்கிழமை மாகாணத்தின் பூட்டுதல் கட்டுப்பாடுகளையும் தளர்த்த சீன அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக சி.என்.என். செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனாவின் பரவலானது ஹூபேயின் வுஹான் நகரில் முதன் முதலாவது ஆரம்பமானது.

இதன் காரணமாக ஹூபே மாகாணம் பூட்டப்பட்டதுடன், பல மில்லியன் கணக்கானவர்களை வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஹூபேயில் இதுவரை  67,801 பேர் கொரோனா தொறறாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் 3,160 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.

இந் நிலையில் கடந்த ஆறு நாட்களில் ஹூபேயில் கொரோன தொற்றுக்குள்ளான ஒருவர் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாகவே ஹூபே மாகாணத்தின் பெரும்பாலான இடங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த பூட்டுதல் நடவடிக்கையை புதன்கிழமை தளரத்த சீன அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் இதுவரை 82,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3,277 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

அதேநேரம் 73,000 க்கும் அதிகமானோர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்படடுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : The Epoch Times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button