செய்திகள்

இதயநோய்கள் ஏற்படும் அபாயத்தில் ஒரு கோடி 30 லட்சம் ஆஸ்திரேலியர்கள்!!

Source :- SBS tamil
சுமார் ஒரு கோடி முப்பது லட்சம் ஆஸ்திரேலியர்களுக்கு பல்வேறு வகையான இதய நோய்கள் ஏற்படும் அபாயமிருப்பதாக கடந்த ஆண்டு மேற்கொண்ட தரவுகளை மேற்கோள்காட்டி ஆஸ்திரேலிய சுகாதர திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
நான்கு ஆண்களில் மூவருக்கு அல்லது இரண்டு பெண்களில் ஒருவருக்கு என்ற விகிதத்தில் ஆஸ்திரேலியர்கள் இதய நோய் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதாக சுகாதார திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதய சோதனைகளை மேற்கொண்டு தகுந்த வைத்திய ஆலோசனைகளை பெற்று அதனை பின்பற்றினால் இப்படியான இதய நோய்கள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தாமல் தவிர்க்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ள சுகாதார திணைக்களம், இவ்வகையாக முற்கூட்டிய மருத்துவ பாதுகாப்புமுறைகளை பின்பற்றாவிடின் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் தாக்குதல்கள் எந்நேரமும் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.
தற்போது கிடைக்கப்பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியர்கள் உடனடி மருத்துவ ஆலோசனைகளை நாடினால், அடுத்த மூன்று வருடங்களில் நாளொன்றுக்கு 42 இதய நோய் ஏற்படும்சம்பவங்கள் என்ற சராசரி எண்ணிக்கையில் பாதகமான விளைவுகளை தவிர்க்கலாம் என்று சுகாதார திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
திணைக்கம் முன்பு வெளியிட்ட தகவல் அறிக்கையில், 67 வீதமான ஆஸ்திரேலியர்கள் உடல்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளர் என்று சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதயநோய்கள் ஏற்படும் அபாயத்தில் ஒரு கோடி 30 லட்சம் ஆஸ்திரேலியர்கள்!! 1

Back to top button