செய்திகள்

“கொரோனா பரவல் விரைவில் குறையும்” – நோபல் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட் (michael levitt) நம்பிக்கை

கொரோனா நோய்த்தொற்று, உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று, விரைவில் முடிவுக்கு வரும் என,சீனாவின் நிலையை கணித்த நோபால் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட் (michael levitt) நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

* சீனாவில், கொரோனா நோய்த்தொற்று லட்சக்கணக்கானோரை பாதிக்கும் என பல வல்லுநர்கள் கணித்தபோது, மைக்கேல் லேவிட் (michael levitt) , மிகத்துல்லியமாக தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்.
* அதில் சீனாவில் 80 ஆயிரம் பேர் மட்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள் எனவும், அதில் 3250 பேர் வரை மட்டுமே உயிரிழக்க கூடும் என கணித்திருந்தார்.
* இதை மெய்ப்பிக்கும் வகையில் சீனாவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 171 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3277 ஆகவும் இருந்தன
* இதனிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் நாளேட்டுக்கு  அவர் அளித்த பேட்டியில் கொரோனா நோய்த்தொற்று படிபடியாக குறையும் என கூறியுள்ளார்.
* 78 நாடுகளில் நாள் தோறும் 50 பேருக்கு நோய்தொற்று ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
* இத்தாலியில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவியதற்கு, அந்த நாட்டில் நிலவும் தடுப்பூசிக்கு எதிரான மனநிலையே மிக முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
* சளி, காய்ச்சல் ஏற்பட்ட பலருக்கு  கொரோனா சோதனை செய்ய முடியாமல் போனதாலேயே உயிரிழப்புகள் அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
* சர்வதேச அளவில் தற்போது சீனா கையாண்ட மக்களை தனிமைப்படுத்தும் முறை கையாளப்படுவதால்,பெருமளவில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
* கொரோனா வைரஸ் புதிதாக உருவான வைரஸ் என்பதால், அதற்கு மருந்து கண்டறிவதில் தாமதம் ஏற்படுவதாகவும், எல்லாம் விரைவில் சரியாகி விடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்
* இந்த கொரோனா, லட்சக்கணக்கானோரை பலி கொல்லாது என கணித்துள்ள நோபல் பரிசு பெற்ற விஞ்ஞான் மைக்கேல் லேவிட் (michael levitt), நோய்த்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் எனவும் நம்பிக்கை ஒளியை பாய்ச்சியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button