செய்திகள்

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கான எளிய சிகிச்சை!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எம்மை தற்காத்துக் கொள்வதற்கான எளிய சிகிச்சையான  பஞ்சபூத மருத்துவ சிகிச்சையை பற்றி அதனை அறிமுப்படுத்திய மருத்துவர் டொக்டர் ஆதி ஜோதி பாபு பின்வருமாறு பகிர்ந்துகொள்கிறார்.

முதலில் கொரோனா வைரஸ் தொற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த வைரஸ் தொற்று தொண்டையில் 14 நாட்கள் உயிர் வாழ்கின்றது என்றும், அதன்  பிறகு நுரையீரலில் சளியை அதிகரிக்கச்செய்து, அதனை திட நிலையில் வெளியேற்ற முடியாத நிலையை உருவாக்கி, நோயை முற்ற செய்து, சுவாச உறுப்புகளையும், சிறுநீரகங்களையும் செயலிழக்கச் செய்து, மரணத்தை  ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

அதாவது திரவ நிலையில் உள்ள சகல உயிர் ஆற்றல்களையும் நேரடியாக பாதித்து, அழிவை ஏற்படுத்துகிறது என்று சொல்லலாம் . எல்லா மருத்துவ முறைகளும் உடலுக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திகளை கொண்டே பணியாற்றுகின்றன.

ஆனால் பஞ்சபூத மருத்துவத்தில் மருந்துகள் இல்லாமலேயே நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கவும், அவற்றை வளர்த்தெடுக்கவும், நோய்களை கட்டுப்படுத்தவும், அதனை முற்றாக அழிக்க முடியும். இதுதான் இந்த மருந்தில்லா மருத்துவமான பஞ்சபூத மருத்துவத்தின் சிறப்பம்சம்.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கான எளிய சிகிச்சை! 1

மனித உடலின் வரைபடம் ஒன்றின் முன்புறம், பின்புறம் ஆகியவற்றில் புள்ளிகள் வைக்கப்பட்டிருப்பதை காண்கிறீர்கள்.

தண்டுவடத்தின் முன்புறத்தில் 18 புள்ளிகளும், தண்டுவடத்தின் பின்புறத்தில் 18 புள்ளிகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த புள்ளிகளின் பக்கவாட்டிலும், உடலை சுற்றியும் ஆறு இடங்களில் புள்ளிகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

இவை மட்டுமல்லாமல் உச்சியிலும், ஆசனவாய்க்கும் பிறப்புறுப்புக்கும் இடையில் இரண்டு புள்ளிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மூக்கின் இரு துவாரங்களில் மூக்குத்தி குத்தும் இடத்திலும், காதுகள் இரண்டிலும் தோடு போடும் இடத்திலும், காதுகளில் மேற்பகுதியில் தோடு போடும் இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த காது மூக்கில் உள்ள பூத புள்ளிகளில் கைகளால்  அழுத்தம் தரும்போது மட்டும் சுவாசத்தை உள்ளே இழுத்தும், வெளியேற்றியும் சுவாச பயிற்சியுடன் செய்யலாம்.

இவ்வாறு செய்யும் போது சுவாச குழாய் வழியாக செல்லும் தூய காற்றினாலும், அந்த புள்ளிகளில் இருந்து உருவாகும் நோய் எதிர்ப்பாற்றலாலும் சுவாசத்தில் ஒட்சிசனுடன் கூடிய காற்றின் இயக்கம் அதிகரிக்கும். இதனால் தலை முழுவதும் சுவாசக்குழாய், உணவுப்பாதை, நுரையீரல்கள் என அனைத்திலும் உள்ள நீர் தன்மையில் மாற்றங்கள் உருவாகி, தேவையில்லாத அனைத்து நீரும் வெளியேற்றப்பட்டு, நோய்த்தொற்றிற்குரிய  வாய்ப்புகள் இல்லாமல் போகும்.

அது மட்டும் அல்லாமல் மற்ற இடங்களிலுள்ள புள்ளிகளில், ஒவ்வொரு புள்ளியிலும் விரலாலும் அல்லது காகித பென்சிலாலும் சிறிதளவு அழுத்தம் கொடுக்கவும். பின்னர் அந்தப் புள்ளியின் 8 புறத்திலும் மிதமான அழுத்தம் தரவும்.

குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை இந்த அனைத்து புள்ளிகளிலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு காலை, மதியம், மாலை, இரவு என நான்கு முறை மருத்துவம் செய்து கொள்ளவும்.

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து இதனை செய்வதால் எம்முடைய உடலில் உள்ள பஞ்சபூதங்கள் முதல் பத்து பூதங்கள் வரையிலும் உள்ள அனைத்து சக்திகளிலும் இயக்கம் உண்டாகி, அவற்றில் சமநிலையும், நோய் எதிர்ப்பாற்றல் உருவாகி, வாயு, திட, திரவ நிலைகள் அனைத்தின் இயக்கங்களுடன் தொடர்புடைய அனைத்து உறுப்புகளிலும் நோய்களை உடலுக்குள் வரவிடாமல் தடுக்கும் ஆற்றல் உருவாகும். அதற்குரிய பலனை தினம் தினம் காணலாம். பிறகு நோயிலிருந்து படிப்படியாக விடுதலை கிடைக்க ஆரம்பிக்கும்.

மருத்துவ மொழியில் விவரிக்க வேண்டுமென்றால் இந்த புள்ளிகள் அனைத்தும் எம்முடைய உள் மைக்ரோ உயிர் ஆற்றல்களோடும், வெளியில் இருந்து வரும் மேக்ரோ பிரபஞ்ச ஆற்றலோடு சம்பந்தப்பட்டுள்ளன.

குளிர்ச்சியான உணவுப் பொருள்களை, அவர்களுக்கு ஒவ்வாமை தரும் உணவுகளை, புளிப்பு , காரம் , இனிப்பு போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதை , இரவு நேரத்தில் அதிகமாக உணவு உட்கொள்வதை குறைந்தபட்சம் மூன்று மாத காலத்திற்கு தவிர்க்கவும்.

உடற்பயிற்சி, தியானம் , உணவு கட்டுப்பாடு, நூல்களை வாசிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது என்று எமக்குக் கிடைத்திருக்கும் சுய தனிமையை ஆரோக்கியமாகவும் மனதில் நேர்மறையான எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையிலும் மாற்றிக்கொண்டால் இந்த கொரோனாவை வரவிடாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

Sources : Virakesari.lk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button