செய்திகள்

ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம், 19 மாவட்டங்களில் நாளை 6 ஆம் திகதி காலை 6 மணிக்கு தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டு மீட்டும் குறித்த மாவட்டங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா அனர்த்த வலையங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில், மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பயணிகள் பணிகளுக்காக, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் நடைமுறையிலுள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக, சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள், மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறும், பொது மக்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தரம் 01 – A/L வரையான Online சுயகற்றல் படிமுறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button