செய்திகள்

யாழில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் பலி – மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் , மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த  உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா? என்று பரிசோதனை செய்வதற்கு மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 2 மணிக்கு யாழ்ப்பாணம், மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடையவரெனவும், கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி கம்போடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தரம் 01 – A/L வரையான Online சுயகற்றல் படிமுறைகள்

 

குறித்த நபர் ஒரு அஸ்துமா நோயாளி என்பதுடன் கடந்த மூன்று நாட்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும் அவர் வைத்தியசாலைக்கு செல்லும் போதே உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்க கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தரம் 01 – A/L வரையான Online சுயகற்றல் படிமுறைகள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button