செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று தொடர்பில் இன்றைய பரிசோதனையில் இரு இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தந்திருக்கும் 08 இணையத்தளங்கள் பற்றிய அறிமுக வீடியோ 👨‍💻👩‍💻.

 

மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 8 பேரில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று 24 பேருக்கான கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.

ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர்.

ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்.

8 பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியை சேர்ந்தவர்கள். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.

இதேவேளை, அரியாலை பகுதியில் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக ஏப்ரல் 1,  ஏப்ரல் 3 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார்.

Sources : Virakesari.lk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button