செய்திகள்

அதிசக்தி வாய்ந்த ஒளிகளை உடலுக்குள் செலுத்த வேண்டும் – அதிரடியாக டிரம்ப் தெரிவித்த மருந்து : மருத்துவர்கள் கொந்தளிப்பு

உலகையே  உலுக்கிவரும் கொரோனாவிற்கு தீர்வு சொல்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி அளித்த பேட்டி இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது,  கோடை காலம் வந்தால் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக வலிமை இழக்கும் என்று அமெரிக்கா அரசில் பணியாற்றும் விஞ்ஞானி வில்லியம் பிராயன் தெரிவித்துள்ளார்.

அதில் மே மாதம் வந்தால் கொரோனாவின் தாக்கம் குறையும். வெயில் மூலம் வரும் புற ஊதா கதிர்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும்.

நாம் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவை அறிவிக்கிறோம். சூரிய ஒளிகள் கொரோனாவை பெரிய அளவில் கொல்கிறது. காற்று மற்றும் நிலப்பரப்பில் இருக்கும் கொரோனவை சூரிய ஒளி கொல்கிறது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

முழுக்க இந்த சோதனை முடிவுகள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இந்த முடிவுகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் வில்லியம் பிராயன் வெள்ளை மாளிகையில் இந்த பேட்டியை கொடுத்த  அடுத்த நொடியே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசினார். அதில், சூரிய ஒளி மூலம் கொரோனா பலியாகும் என்பது பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கிறது.

அதனால் நம்முடைய உடலில் அதிக அளவு ஒளியை செலுத்தினால் ஒருவேளை கொரோனா குணமடைய வாய்ப்பு உள்ளது. நமது உடலுக்குள் புற ஊதா கதிர்கள் கொண்ட ஒளிகள் அல்லது அதிக சக்தி வாய்ந்த ஒளிகளை செலுத்தி கொரோனாவை கொல்ல வேண்டும். நமது உடலுக்கு உள்ளேயோ அல்லது உடலின் மேற்பரப்பிலோ இப்படி நாம் அதிக சக்தி வாய்ந்த ஒளியை அனுப்ப வேண்டும்.

மேலும், இந்த ஒளியை நமது உடலின் இதயத்திற்குள் செலுத்த வேண்டும். எனக்கு இந்த முறை மிகவும் ஆர்வம் அளிக்கிறது என்று டிரம்ப் கூறினார்.

டிரம்ப்பின் இந்த திட்டத்தை பார்த்து அங்கிருந்த செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு அங்கிருந்த விஞ்ஞானி வில்லியம் பிராயன் டிரம்ப் சொன்னதற்கு எப்படி பதில் தருவது என்று குழம்பி போனார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசுவது எந்த வகையிலும் சரியானது இல்லை என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button