செய்திகள்

மின்கட்டணம் அறவிடுதல், மின் துண்டிப்பு குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிவிப்பு

மின்பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணம் அறவிடப்படும் போது, மேலதிக  கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது, அத்துடன் மின்பாவனைகளும் துண்டிக்கப்படமாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம் நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டதால் மின்சார பாவனையாளர்கள் மாதந்த மின்கட்டணங்களை செலுத்த முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டது . இதன் காரணம் மின்சார கட்டணம் செலுத்தும் காலவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை வழங்கப்பட்டது.

மின்சார கட்டணம் செலுத்தும் போது மேலதிக கட்டணம் ஏதும் அறவிடப்படமாட்டாது. அத்துடன் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டண பற்றுச்சீட்டு விநியோகிக்கப்படாது.

பொது மக்கள் மின்சார கட்டணம் செலுத்தும் போது விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். பகுதி அளவிலும் கட்டணம் செலுத்த முடியும்.என்றார்.

Back to top button