செய்திகள்

ஜேர்மனுக்கு சொந்தமான கப்பலை சிறைப்பிடித்துள்ள அவுஸ்திரேலியா! சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்

இலங்கையர்கள் மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டவர்களுடன் கப்பல் ஒன்று அவுஸ்திரேலியாவின் பிடியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
17 பேர் கொண்ட ஜேர்மனுக்கு சொந்தமான கப்பல் ஒன்றை அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறவிடாமல் அந்த நாட்டு அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
தங்களுக்கு உரிய முறையில் உணவு மற்றும் ஏனைய வசதிகளை வழங்கவில்லை என கப்பல் ஊழியர்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தனர்.
அந்த கப்பலின் ஊழியர்கள் பல்வேறு முறைப்பாடுகளை செய்துள்ளனர். இதனாலே கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கப்பலில் தாங்கள் பணி செய்வதற்கு பாதுகாப்பு இல்லை என குறித்த 17 பேரும் முறைப்பாடு செய்துள்ளனர்.
எதிர்வரும் 14 நாட்களுக்கு தங்களுக்கு போதுமான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லை இந்த 17 பேரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் காரணமாக அவுஸ்திரேலியாவின் கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணை நடத்த வேண்டும் என கூறி கப்பலை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
விசாரணை நிறைவடையும் வரை இந்த கப்பல் தடுத்து வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனா எலிசபெத் என்ற இந்த கப்பல் தெற்கு அவுஸ்திரேலியாவின் கெம்லா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனுக்கு சொந்தமான கப்பலை சிறைப்பிடித்துள்ள அவுஸ்திரேலியா! சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் 1

Back to top button