செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு !

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

நாட்டில் இன்று 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நால்வரும் புனானை தனிமைப்படுத்தலில் உள்ள சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 507 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 187 பேர் சந்தேகத்தின் பேரில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இதுவரை 139 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரை இலங்கையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button