செய்திகள்

ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அமுல்செய்யப்பட்டு வருகின்றது.

அந்த 21 மாவட்டங்களிலும் நேற்று இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் திங்கட் கிழமை  அதிகாலை 5.00 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

பின்னர் அன்றைய தினம் முதல் இரவு 8.00 மணியிருந்து அதிகாலை 5.00 மணி வரையிலான 9 மணி நேரமே ஊரடங்கு அமுல் செய்யப்படும்.

எனினும் எதிர்வரும்  6 ஆம் திகதி புதன் கிழமை இரவு 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பகுதிகளிலும் 105 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதன்படி 6 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு அமுல் செய்யப்படும் ஊரடங்கு 11 ஆம் திகதி திங்களன்று அதிகாலை 5.00 மணிக்கு கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த 21 மாவட்டங்களில் தளர்த்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுலிலுள்ள போதிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 4ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் புதிய தீர்மானத்தின் படி அது சாத்தியமற்றதாகியுள்ளது.

மேல்மாகாணத்தில் ஊரடங்கால் சிக்கியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ; இன்று முதல் இருப்பிடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்..!

எனினும் ஊரடங்கு அமுலில் உள்ள போது,  மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி இந்த நான்கு மாவட்டங்களிலும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அரச தனியார் பிரிவுகள்  அது தொடர்பில் திட்டமிட்டு, யாரை சேவைக்கு அழைப்பது என்பது குறித்து தீர்மானித்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘குறிப்பாக அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், அதிகார சபைகளில் யாரை சேவைக்கு அழைக்க வேண்டும் என நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும். தனியார் துறைக்கும் இது பொருந்தும். தனியார் துறையின் செயற்பாடுகளை முற்பகல் 10.00 மணி முதல் ஆரம்பிக்க நாம் ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளோம்.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த மக்கள் வீதிகளில் இறங்குவதையும் ஒரு இடத்தில் ஒன்று கூடுவதையும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும். இலங்கை போக்குவரத்து சபை பஸ்வண்டிகள், ரயில்களில் தொழில் நிமித்தம் செல்வோர் மட்டுமே பயணிக்க முடியும்.

அத்தியாவசிய தொழில்சார்  சேவைகளுக்கு செல்வோர் தவிர ஏனையோர், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாக வீடுகளில் இருக்க வேண்டும்.

மேல்மாகாணத்தில் ஊரடங்கால் சிக்கியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ; இன்று முதல் இருப்பிடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்..!

வீடுகளில் உள்ளோர் உணவு, மருந்து தேவை ஆகியவற்றுக்காக மட்டும் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியும்.  அவ்வாறு வீட்டிலிருந்து வெளிச் செல்லும் எல்லா சந்தர்ப்பங்களிலும் சுகாதாரத் துறையினர் வழங்கியுள்ள வழிகாட்டல் பிரகாரம்  முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை அணியவேண்டும். அத்துடன் பொலிஸ் ஊரடங்கு அனுமதிப்பத்திரத்துடன் பயணித்தாலும்,  முகக்கவசங்கள் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு படி முறைகளை பின்பற்றாவிட்டால் வாகனங்களில் பயணிப்போருக்கும் பயணிக்க முடியுமென ஜனாதிபதியின்  ஊடகப் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணத்தில் ஊரடங்கால் சிக்கியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ; இன்று முதல் இருப்பிடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்..!

Back to top button