செய்திகள்

மருந்துகளை வீடுகளுக்கே பெற்றுக்கொள்வதற்கான புதிய வழிமுறை..!

ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு புதிய தொழில்நுட்ப முறைமையினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, வாட்ஸ்அப், வைபர் மற்றும் இமோ ஆகிய செயலிகளின் ஊடாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகள் பட்டியலை மருந்தகங்களுக்கு அனுப்ப முடியுமென காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக அருகிலுள்ள மருந்தகங்களை தொடர்புகொள்ள முடியாத சந்தர்ப்பங்களில், குறித்த பிரதேச காவல்துறையினருக்கு அறிவிக்க முடியுமென தெரிவிக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி அழைப்பை பெற்றதும், அனைத்து மருந்தகங்களுக்கும் இது தொடர்பில் அறிவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button