செய்திகள்

ஊரடங்கு உத்தரவு குறித்த முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு தொடரும் அதேவேளை, நாடு முழுவதும் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில்,

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மே 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 05.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு  தளர்த்தப்பட்டு மீண்டும் 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் இரவு 8.00மணிமுதல் அதிகாலை 5.00 மணிவரை அமுல் படுத்தப்படும்.

கொழும்பு மற்றும் கம்பஹா  மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளபோது கடந்த மே 11 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார செயற்பாடுகள் மே 16ஆம் திகதி வரை அவ்வாறே முன்னெடுக்கப்படுவதுடன் ஊரடங்கின் பின் மீண்டும் மே 18 ஆம் திகதி முதல் குறித்த இரு மாவட்டங்களிலும் பொருளாதார செயற்பாடுகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button