செய்திகள்

11,597 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம் ; வெற்றுக்கண்ணால் பார்க்கலாம் !

சுமார் 11,597 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் நிகழக்கூடிய அதிசய நிகழ்வான பச்சை வால் நட்சத்திரத்திரம் தோன்றவுள்ளது.

இவ்வாறு  வானில் தோன்றும் பச்சை வால் நட்சத்திரத்தை வெற்றுக்கண்ணால் பார்க்கலாமென நாசா அறிவித்துள்ளது.

ஸ்வான் என்று அழைக்கப்படும் இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் தற்போது பூமிக்கு அருகில் பூமியை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இதன் வால் மட்டும் ஒரு கோடியே 77 இலட்சம் கிலோ மீற்றர் நீளம் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பனி மற்றும் தூசுக்களால் நிறைந்த குறித்த வால் நட்சத்திரம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்வதாகவும், தற்போது பூமியிலிருந்து 5.3 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் இந்த நட்சத்திரம் மே மாத இறுதி வாரத்தில் பூமியில் இருந்து வெற்றுக்கண்ணால் அவதானிக்க முடியுமென்றும் வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சூரியனை நோக்கிய வழியில் செல்லும் போது வெப்பமடைந்து அது சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது என்று கூறும் ஆய்வாளர்கள், குறித்த பச்சை வால் நட்சத்திரத்தை 5 முதல் 6 நாட்கள் வரை வெற்றுக் கண்களால் மக்கள் அவதானிக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button