செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

நாடு தழுவிய ரீதியிலான ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணி நிலவரப்படி 56,326 பேர் மார்ச் 20 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 15,490 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 620 பேர் கைது செய்யப்பட்டனர், அத்துடன் காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் 274 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையில், மார்ச் 18 ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவை மீறிய நபர்கள் மீது 13,556 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 5,221 அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button