செய்திகள்

தேர்தல் திகதி அறிவிப்பு குறித்து மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானக்கும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவினுடையதாகும். அதனை வேறு யாரும் செய்யத் தேவையில்லை என்று தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய , தினத்தை குறிப்பிட்டு பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தினம் குறித்து ஒவ்வொருவரும் தாம் நினைக்கும் தினங்களைக் கூறி பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம். காரணம் நாம் ஆகஸ்ட் 3 ஆம் திகதியிலிருந்து 60 – 70 நாட்கள் கணக்கெடுக்கப்படும் என்று கூறியதும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான அனைத்து நாட்களும் காணப்படுகின்றன.

பெரும்பாலானவர்கள் சனிக்கிழமையில் தேர்தல் நடத்தப்படும் என்பதால் அந்த மாதத்தில் வரும் இரு சனிக்கிழமைகளான 8 மற்றும் 15 ஆகிய தினங்களைக் கூறுகின்றனர்.

ஏதெனுமொரு வழியில் அந்த தினங்களில் நாம் தேர்தலை நடத்தினால் அதன் பின்னர் சிலர் , ‘ நாம் முன்னரே கூறினோம். இது அரசியல் கட்சியின் அழுத்தத்தினால் இடம்பெற்றுள்ளது.’ என்று கூறுவார்கள். எனவே நாம் மிகுந்த தயவுடன் கோருகின்றோம்.

தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடிய பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிப்பதற்கு இடமளியுங்கள். நாட்டின் பொருளாதார நிலைமை என்பவற்றைக் கொண்டே தேர்தலுக்கான தினம் குறித்து தீர்மானிக்கப்படும்.

இந்நிலையில் ஆகஸ்ட் 8 அல்லது 15 ஆம் திகதிகளில் தேர்தலை நடத்துமாறு கூறப்பட்டால், 15 ஆம் திகதி மத வழிபாட்டு தினம் என்பதால் அத்தினத்தில் வைக்க வேண்டாம் என்று கூறப்படும்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button