செய்திகள்

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள செய்தி

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதல் வாரத்தின் இறுதியில் க.பொ.தர உயர்தர பரீட்சை நடைபெறும் தினம் தொடர்பிலான இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் க.பொ.தர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களதும், குறித்த வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆசிரிய சங்கத்தினர் மற்றும் அதிபர்களின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கல்வியமைச்சு பெறவுள்ளது.
பின்னர் குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு உயர்தர பரீட்சை நடாத்தப்படும் தினம் தொடர்பிலான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Hiru news

Leave a Reply

Your email address will not be published.

Back to top button