செய்திகள்

உலகில் இன்று இடம்பெறுவுள்ள அரிய நிகழ்வு !

2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று (21) நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை இலங்கையிலும் அவதானிக்க முடியும் என்பதோடு யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பிரதேசத்தில் 24 வீதமும் , கொழும்பு பிரதேசத்தில் 16 வீதமும் தென்படும்.

இலங்கை மக்களுக்கு அரைச் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9.15 மணி முதல் மணி வரை 6 மணித்தியாலங்களுக்கு சூரிய கிரகணம் நீடிக்கவுள்ளது. இன்று காலை 10.20 மணியளவில் அரை சூரிய கிரகணத்தை கொழும்பு நகரில் காண முடியும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், காலை 10.24 மணியளவில் யாழ்ப்பாணத்திலும் காலை 10.34 மணியளவில் மாத்தறையிலும் அரைச் சூரியக்கிரகணத்தை அவதானிக்க முடியும்.

இது நெருப்பு வளைய சூரிய கிரகணமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூரிய கிரகணத்தை வெற்றுக்கண்களால் அவதானிக்க வேண்டாமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் இது தொடர்பில் இலங்கை கோள் மண்டலத்தின் பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா மேலும் தெரிவித்திருப்பதாவது, இதனை அவதானிப்பதற்குப் பொறுத்தமான இலக்கம் 14 என்ற விசேட கண்ணாடி, சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான விசேட கண்ணாடி என்பவை மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஏனைய கண்ணாடி பொருட்கள் , எக்ஸ்ரே அட்டைகள் என்பவற்றைப் பயன்படுத்தி இதனைப் பார்வையிட வேண்டாம் என்று பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக வெற்றுக் கண்களால் இதனை அவதானிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button