செய்திகள்

கொரோனா வைரஸ் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனா வைரசினை உலகளாவிய தொற்றுநோய் என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குநர் டெட்டிரோஸ் அதானோம் கெப்ரோயஸ் இதனை அறிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

pandemic  என்ற சொல் அவதானமில்லாமல் அல்லது சாதாரணமாக பயன்படுத்தப்படும் சொல் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் 4291 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது உலக சுகாதார ஸ்தாபனம் 1

எதிர்வரும் நாட்களில் வாரங்களில் பலர் பாதிக்கப்படுவதை நாங்கள் பார்க்கப்போகின்றோம்,பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவிவருவது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம், நோய் பரவும் வேகமும் அதன் தாக்கத்தின் கடுமையும் எங்களை அச்சமடைய வைத்துள்ளது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குநர் டெட்டிரோஸ் அதானோம் கெப்ரோயஸ்குறிப்பிட்டுள்ளார்.

Back to top button