செய்திகள்

யாழில் இடம்பெற்ற விபத்தில் 2 இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (20) மிருசுவில் – உசன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமொன்று முந்தி செல்ல முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் இயக்கச்சி பகுதியை சேர்ந்த 20 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Sources : virakesari.lk

Back to top button