செய்திகள்

நாட்டில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர்  இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றையதினம் தொற்றுக்குள்ளான 12 பேர் அதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,686 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 668 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 168 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 2,007 பேர் குணமடைந்தும், 11 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button