ஆன்மிகம்

ஜென்ம ராசியில் அமரப்போகும் கேது…. யாரையெல்லாம் ஆட்டிப்படைக்க போகிறாரோ? இந்த 5 ராசிக்கும் திடீர் விபரீத ராஜயோகமாம்!

தற்போது தனுசு ராசியில் உள்ள கேது பகவான் விருச்சிகம் ராசிக்கு நகர்கிறார்.

கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறப்போகிறது.

செப்டம்பர் மாதம் முதல் கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

கடன் கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. உங்கள் உடல் நிலையில் சிரமத்தை ஏற்படுத்துவார். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. கேதுவின் அதிபதி விநாயகரை வழிபடுங்க. பாதிப்புகள் குறையும். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமரப்போகும் கேது பகவானால் எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும்.

ரிஷபம்

ஏழாம் இடத்தில் அமரப்போகும் கேதுவினால் எதிரிகள் தொல்லை நீங்கும். எந்த ஒரு விசயத்திலும் புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாடு திரும்பும் நேரம் கைகூடி வரப்போகிறது. தொல்லைகள் நீங்க விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்குங்கள்.

மிதுனம்

மிதுனம் ராசிக்கு ஆறாம் இடத்தில் அமரப்போகும் கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறும். உடல் ஆரோக்கியம் பெறும். கேது பகவான் எதிரிகளை துவம்சம் செய்து விடுவார். கடன் பிரச்னைகள் குறையும். பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். செவ்வாய்கிழமைகளில் விநாயகரை வெற்றிலை மாலை சாற்றி வணங்குங்கள்.

கடகம்

கேது பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் அமர்ந்து பல நன்மைகளை செய்யப் போகிறார். கேதுவினால் எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறைக் காட்டுங்கள். வயிறு பிரச்சினை வரலாம் நேரத்திற்கு சரியான உணவை சாப்பிடுங்கள். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். மனதில் நற்சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார். சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை அருகம்புல் மாலை சாற்றி வணங்குங்கள்

சிம்மம்

நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் அமரும் கேது பகவானால் உங்க வாழ்க்கை தரம் உயர்வடையும். வேலையில் முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சொத்து, சுகத்தை கொடுப்பார் அதே நேரத்தில் முன்கோபத்தை குறையுங்கள். அம்மாவின் உடல் நலனில் அக்கறைக் காட்டுங்கள். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

கன்னி

கேது முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும். மறைமுக எதிரிகள் தொல்லை தீரும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்துக்கள் வாங்க முயற்சி செய்யலாம். விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவார்கள். உடன்பிறந்தோருடன் சின்ன பிரச்சினைகள் வரும். விநாயகரை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

துலாம்

துலாம் ராசிக்கு கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் அமர்வதால் குடும்ப பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அநாவசிய பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வீட்டில் வீண் வாக்குவாதத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

கேது பகவான் உங்க ஜென்ம ராசியில் அமரப்போகிறார். உடல் நிலை பாதிப்புகள் வந்து போகும். விரக்தியான மனநிலை ஏற்படும் என்றாலும் கவலைப்படாமல் செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள். மனதளவில் நீங்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளுங்கள். ஞாயிறன்று ராகு காலத்தில் பிரத்யங்கிரா தேவியை வணங்குங்கள்.

தனுசு

தனுசு ராசிக்கு ஜென்மத்தில் இருந்த கேது விரைய ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலையும் உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வும் கூடி வரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பிள்ளைகளுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு கை கூடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

மகரம்

மகரம் ராசிக்கு கேது பகவான் லாப ஸ்தானத்தில் அமர்வதால் பொருளாதார நிலை உயரும். பண வரவு அதிகரிக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு திடீர் யோகமும் அதிர்ஷ்டமும வரும். ஆன்மீக காரியங்களுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள்.

கும்பம்

கும்பம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் வேலை தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிலர் புதிய வீடு மாறுவீர்கள். உங்களின் பொருளாதார நிலை சீரடையும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொறுமையோடு இருந்தால் இழப்பை சரி செய்யலாம். இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள்.

மீனம்

மீனம் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் கேது அமரப்போகிறார். இந்த ஆண்டு நீங்கள் நினைத்தது நிறைவேறும். உங்க வாழ்க்கையில் மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் கேது கொடுப்பார். கொரோனா லாக்டவுன் காலம் முடிந்த உடன் நீண்ட நாட்கள் போக நினைத்த கோவிலுக்கு குடும்பத்துடன் பயணமாகச் செல்வீர்கள்.

Back to top button