செய்திகள்

இரண்டு நாட்களின் பின் முதல் கொரோனா தொற்றறாளர் இலங்கையில் அடையாளம்

நாட்டில் நேற்றையதினம் ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையானம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் இலங்கையில் இரண்டு நாட்களுக்கு பிறகு அடையாளம் காணப்பட்டட முதல் தொற்றாளர் ஆவார்.

இந்நிலையில்,  கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,951 ஆக அதிகரித்துள்ளது.

புதிய கொரோனா தொற்றாளர் மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர் ஆவார்.

கொரோனா வைரஸ் தொற்றினால்  ஐந்து வெளிநாட்டினர் உட்பட 414 நபர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 31 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து 1,526 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்கள்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button