செய்திகள்

வங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்

பல்வேறுப்பட்டபொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு வங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடன்களை மீள் செலுத்த முடியாதவர்களையும், புதிதாக கடன் பெற தீர்மானித்துள்ளவர்களையும் வங்கிக்குள் அநாவசியமான முறையில் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கி பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

நிதியமைச்சின் கொள்கை மறுசீரமைப்பு கூட்டம் இன்று நிதியமைச்சில் இடம்பெற்றது.  இதன்போது  அமைச்சுக்கு பொறுப்பான  அமைச்சரான நிதியமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button