செய்திகள்

இலங்கை மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஜனாதிபதி

கொவிட்-19 அடக்குமுறையின் செயற்பாட்டில் சர்வதேச ரீதியில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்தமைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

சீனாவில் Yicai Global நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையின்படி , கொவிட் -19 அடக்குமுறை செயல்பாட்டில் சுகாதார, பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளில் வெற்றிகரமான நாடாக இரண்டாவது இடத்தில் இலங்கை காணப்படுகின்றது.

சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் முறையான வள மேலாண்மை மற்றும் அர்ப்பணிப்பு மூலம் அடையப்பட்ட இந்த சாதனைக்கு அந்த அதிகாரிகளுக்கும் முழு இலங்கை மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button