செய்திகள்

நாட்டின் முக்கிய இரு பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு- சற்றுமுன் வெளியான செய்தி

திவுலுப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை ஆகிய காவற்துறை பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா – திவுலுப்பிட்டிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுள்ளது.

குறித்த பெண் காய்ச்சல் காரணமாக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் மூலம் கொவிட் 19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் 15 பேரும், குறித்த பெண் பணியாற்றிய தனியார் நிறுவனத்தின் 40 பேரும் தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கு எவ்வாறு கொவிட் 19 தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

அவருடன் தொடர்பை பேணியவர்களிடத்தில் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகளது முடிவுகளின் பின்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் முக்கிய இரு பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு- சற்றுமுன் வெளியான செய்தி 1 நாட்டின் முக்கிய இரு பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு- சற்றுமுன் வெளியான செய்தி 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button