செய்திகள்

Update : கம்பஹாவில் கொரோனா : 400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

கம்பஹா திவுலப்பிடிய பகுதியில் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து குறித்த பெண்ணுடன் தொடர்புகளை பேணிய மேலும் 400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்தவகையில் கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் 7 கிராம சேவகர் தொகுதிகளுக்கு மறு அறிவத்தல் வரும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் தொழில் புரிந்த தனியார் நிறுவனம் மூடப்பட்டுள்ளதோடு , அவருடன் தொடர்புளை பேணிய 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button