செய்திகள்

மீன் மார்கெட்டில் அரங்கேறிய அதிர்ச்சியான காரியம்… மீன் பிரியர்களே உயிரையும் பறிக்கும் உஷார்!

தற்போது நாம் உபயோகப்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் கலப்படம் என்பது மிகவும் சர்வசாதாரணமாகிவிட்டது.

கோவையில் கெட்டுப்போன மீன்களில் பார்மலின் தடவி விற்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 430 கிலோவிற்கு கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்துள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கோவையில் மீன்மார்க்கெட்களில் மீன்கள் மீது பார்மலின் தடவி விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில், உணவுப்பாதுகாப்பு அலுவலர் சில குழுக்களை ஏற்பாடு செய்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையில் 70 கிலோ மீன்கள் பார்மலின் தடவி விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தவிர 430 கிலோ கெட்டுப்போன மீன்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது. மொத்தம் 510 கிலோ மீன்களைக் கைப்பற்றி அழித்துள்ளனர்.

பார்மலின் தடவிய மீன்களை உண்டால் வயிற்று வலி மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் வரும் என்பதோடும் இவற்றை தொடர்ச்சியாக உண்டால் புற்றுநோய் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கையை அந்த மார்க்கெட்டில் விநியோகித்த பொலிஸார் இப்படியான மீன்களை விற்கக் கூடாது என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர்.

 

Back to top button