செய்திகள்

3 மாதங்களுக்குப் பின் நாளை பாடசாலைகள் திறப்பு: விபரம் இதோ !

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாத காலமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளன. கல்வி  நடவடிக்கைகள் 4 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக நாளை அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள், மற்றும் வெளிக்கள ஊழியர்கள் ஆகியோர் பாடசாலைக்கு சமூகம் தரவுள்ளனர். என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி  கல்வி  நடவடிக்களை அடுத்த வாரம் முதல்  ஆரம்பிப்பதற்கான  திட்டமிடல்கள் இவ்வாரம் முழுவதும் செயற்படுத்தப்படும். சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பறைகளை ஒழுங்குப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு அம்சங்கள் பாடசாலைகளில் முறையாக செயற்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள்   முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை ஆரம்பிக்கும் இரண்டாம் கட்டம் எதிர்வரும் மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கப்படும்.  உயர்தர வகுப்பு அதாவது 13ம் தரம், 11ம் தரம் மற்றும் 5ம் தர மாணவர்களின் கற்றல்  நடவடிக்கைகள் அடுத்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும்.

இவ்வருடம் இடம் பெறவுள்ள கல்வித்தராதர உயர்தர பரீட்சை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Back to top button