செய்திகள்

கொரோனா தொற்றுடன் தம்புள்ளை பொருளாதார நிலையத்திற்குள் நுழைந்த இருவர்

தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் இன்றைய தினம் 100 பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள தம்புள்ளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பகுதிக்கு கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் சென்றுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மரக்கறி விற்பனையாளரும் அவரது வாகன ஓட்டுனருமே தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு சொன்ற கொரோனா தொற்றாளர்கள் ஆவர்.

தூனகஹா மற்றும் திவுலப்பிட்டியவைச் சேர்ந்த இருவரும் தற்போது ரம்புக்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மினுவாங்கொடை பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு நபருடன் இவர்கள் இருவரும் கதிர்காமத்துக்கு சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

பிராண்டிக்ஸ் தொழிற்சாலையின் ஊழியர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்களும் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டது.

Back to top button