செய்திகள்

எச்சரிக்கை : கல்கிசையில் தொற்றாளர் ஒருவர் அடையாளம் : கொழும்பில் பல இடங்களில் நடமாடியதாக தகவல்

கொழும்பு, கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் என சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த நபர் அண்மையில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்ததாகவும், செப்டெம்பர் 27 ஆம் திகதி கொழும்பு சர்வதேச புத்தக் கண்காட்சியை பார்வையிடச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

நோயாளரின் மனைவி ஒரு வைத்தியர் எனவும் தற்போது அவர் மகப்பேறு விடுவிப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த நபர் இரணவில தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்படடுள்ளார்.

அதே நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Back to top button