செய்திகள்

வெளியிடப்பட்டது சுகாதார அமைச்சின் முக்கிய வர்த்தமானி! விதிகளை மீறினால் 10,000 ரூபா அபராதம்

புதிய COVID-19 தடுப்பு விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

புதிய வர்த்தமானி அறிவிப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று கையெழுத்திட்டார்.

புதிய கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளுள் தனிநபர்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானியின் படி, கொரோனா தொற்று கட்டுபாட்டு விதிமுறைகளை மீறும் நபர்கள் 06 மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது 10,000 ரூபா அபராதம் விதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வர்த்தக மற்றும் பணி இடங்களுக்குள் பிரவேசித்தல் மற்றும் பேணுதல் போன்ற விடயங்களும் இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பணியிடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்குள்ளும் பிரவேசிக்கும் அனைவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிந்திருத்தல்

  •  இருவருக்கிடையில் 1 மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியை கடைபிடித்தல்
  • பணி இடங்களுக்குள் பிரவேசப்பதற்கு முன்னர் அனைத்து நபர்களினதும் உடல் வெப்பத்தை அளவிடுதல்
  • கிருமிநாசினி திரவத்துடன் போதுமான வகையில் கைகளைக் கழுவுவதற்கான வசதிகளை வழங்குதல்
  •  உட்பிரவேசிக்கும் அனைத்து நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவண பதிவை மேற்கொள்ளல்
  • பணி இடங்களில் ஆகக் கூடிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஏனைய நபர்களின் எண்ணிக்கை மேற்படாதவகையில் வைத்துக்கொள்ளுதல்

 

இதே போன்று பயண வரையறை , தனிமைப்படுத்தல் அலுவல்கள், போக்குவரத்து அலுவல்கள் போன்ற விசேட விடயங்களுக்கான சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்டது சுகாதார அமைச்சின் முக்கிய வர்த்தமானி! விதிகளை மீறினால் 10,000 ரூபா அபராதம் 1 வெளியிடப்பட்டது சுகாதார அமைச்சின் முக்கிய வர்த்தமானி! விதிகளை மீறினால் 10,000 ரூபா அபராதம் 2 வெளியிடப்பட்டது சுகாதார அமைச்சின் முக்கிய வர்த்தமானி! விதிகளை மீறினால் 10,000 ரூபா அபராதம் 3 வெளியிடப்பட்டது சுகாதார அமைச்சின் முக்கிய வர்த்தமானி! விதிகளை மீறினால் 10,000 ரூபா அபராதம் 4

Back to top button