செய்திகள்

கொழும்பு குற்றவியல் பிரிவில் 14 அதிகாரிகளுக்கு கொரோனா

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர் முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அவருடன் தொடர்புகளை பேணிய ஏனைய 20 அதிகாரிகள் மீது பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த பி.சி.ஆர். சோதனை முடிவுகளில் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Back to top button