செய்திகள்

இவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்துகொள்ளுங்கள், வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை

வீடுகளில் வயது முதிர்ந்தவர்கள், இருதய நோய் மற்றும் ஏனைய நோய் நிலைமைகளைக் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இருப்பின் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனால் அவர்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு உயர்வாகக் காணப்படுகின்றது.

ஆகவே வீடுகளில் இவ்வாறானர்கள் இருப்பின் அவர்களுடன் நெருங்கிப்பழகுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரச மருந்தாக்கக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் முன்னரை விடவும் மிக வேகமாகப் பரவி வருகின்றது.

கொரோனா வைரஸின் கட்டமைப்பு மற்றும் அதன் தன்மையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமே இதற்குக் காரணம் என்று வைத்திய நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

இதன் காரணமாக தனிமைப்படுத்தல் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டியதும் அதனைப் பொதுமக்கள் சரிவரப் பின்பற்ற வேண்டியதும் அவசியமாகின்றது.

Back to top button