சினிமா

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நடிகர் தவசி திடீர் மரணம்.. கதறும் திரையுலகினர்கள்

கடந்த நாட்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மெலிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கியது.

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவருக்கு இலவச சிகிச்சை அளித்து பேருதவி புரிந்திருக்கிறார், திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன்.

அதன் பிறகு, நடிகர்கள் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிடோர் உதவினார்கள். அவர்களையடுத்து, நடிகர் சிம்புவும் ஒரு லட்சம் நிதியுதவி அளித்தார்.

இந்த நிலையில், மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 60. இவரின் மறைவுக்கு பல திரைப்பிரபலங்கள் கண்ணீருடன் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Back to top button