செய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் கொரோனா நோயாளர்கள் பதிவு – Gampaha Corona Update

கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 24 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கம்பாஹா மாவட்டத்தில் இதுவரை 4,949 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அநேரம் 73,840 சி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று கம்பாஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மிகாரா எப்பா தெரிவித்துள்ளார்.

மேலும், கம்பாஹா மாவட்டத்தில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு வெளியே அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து 06 ஊழியர்களும் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.

இதேவேளை கட்டுநாயக்கவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த துருக்கிய ஏயர்லைன்ஸ் விமான உதவியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர் சிகிச்சைக்காக மலோபேயில் அமைந்துள்ள நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

துருக்கிய ஏர்லைன்ஸ் விமானங்கள் அன்றாடம் கடுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகின்றன. விமானத்தின் குழுவினர் அடுத்த நாள் அடுத்த விமானம் வரும் வரை ஹோட்டலில் ஓய்வெடுப்பார்கள்.

இதன்போதே விமான உதவியாளருக்கு மேற்கொண்ட சோதனையின் போது கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது.

Source
Virakesari
Back to top button