செய்திகள்

நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன – Isolated areas in sri lanka

கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகள் உடன் அமுலுக்க வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் – 19 கட்டுப்பாட்டு தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கிரிமெத்குடாவ  கிராமசேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்திலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை! சீரற்ற காலநிலையால் 83 குடும்பங்கள் பாதிப்பு

அத்துடன் பண்டாரகம  பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட, அட்டுலுகம கிராமசேவகர் பிரிவு, எபிடமுல்ல கிராமசேவகர் பிரிவு,  கொலமெதிரிய கிராமசேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை,  கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட பொலிஸ் பிரிவின், புலுகஹதென்ன கிராமசேவகர் பிரிவு,  தலம்புகஹவத்தை கிராமசேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்! மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது

Source
Virakesari
Back to top button