செய்திகள்

யாழ் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை! சீரற்ற காலநிலையால் 83 குடும்பங்கள் பாதிப்பு – Niver Puyal

கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டதிற்குட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்தார்.

மேலும் தற்போது நிலை கொண்டுள்ள  தாழமுக்கத்தின் தாக்கத்தினால் கடலானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும்  80-100 கிலோமீற்றர்  அளவில் காற்றுவீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதனால் யாழ் மாவட்டத்தில் கடலுக்கு செல்பவர்கள் குறிப்பாக மீன்பிடித் தொழிலுக்கு செல்பவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும் எனவும் அத்தோடு கரையோரப் பகுதி மக்கள் மற்றும் கரையோரத்தை அண்டிய மக்கள்  விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

யாழ் மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்க பெற்றிருகின்றது எனினும் இதுவரையில் சூறாவளி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக  யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவினையும்  உள்ளடக்கியதாக 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அத்தோடு 80 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

தாழமுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Back to top button