செய்திகள்

நிறைவேறியது 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்…! – Budget 2021 Sri Lanka

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது.

நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்றைய தினம்(10.12.2020)வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

அதில், வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், வரவு செலவு திட்டத்திற்கு எதிராக 54 வாக்குகளும் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் 97 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.

Back to top button