ஆன்மிகம்

Daily Horoscope : 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.. இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.03.2020 )..!

08.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (Daily Horoscope For All Signs)

பஞ்சாங்கம்

நாள் ஞாயிற்றுக்கிழமை
திதி சதுர்த்தசி
நட்சத்திரம் மகம்
யோகம் மரணயோகம்
ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 வரை
எமகண்டம் 12.00 முதல் 1.30 வரை
நல்லநேரம் காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 3 முதல் 4 வரை
சந்திராஷ்டமம் உத்திராடம்
சூலம் மேற்கு
பரிகாரம் வெல்லம்

 

மேஷராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமை அவசியம். செலவுகளை சமாளிக்கத் தேவையான பணம் இருப்பதால் பிரச்னை எதுவும் இருக்காது. புதிய முயற்சிகளில் நன்றாக யோசித்து இறங்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். செரிமானப் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். சக ஊழியர்களின் வேலைகளை எடுத்துச் செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாலையில் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்

மிதுனராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகவே கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயம் தருவதாக அமையும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

கடகராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சி களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்வீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த பணம் கிடைக்கக்கூடும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சிம்மராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும்.

கன்னிராசி அன்பர்களே!

எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக் கூடும். பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். ஓய்வெடுக்க வேண்டிய நாள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். பிற்பகலில் நன்மைகள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

துலாராசி அன்பர்களே!

உற்சாகமாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும் என்பதால், கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். சக வியாபாரிகளால் மறைமுக தொல்லைகள் ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. வாடிக்கையாளருடன் சிறு சச்சரவு ஏற்படக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

தனுசுராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயன் தருவதாக இருக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். லாபம் வழக்கம்போலவே இருக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

மகரராசி அன்பர்களே!

எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கும்பராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும்.

மீனராசி அன்பர்களே!

புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு வீட்டிலும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு: டெல்லியில் இரு பள்ளிகள் மூடல் – கடற்படை நிகழ்வு ரத்து

ஏழரை சனி முடிய கண்டச்சனி, அஷ்டம சனி என அடுத்தடுத்து வருடக்கணக்கில் ஆட்டி படைக்க போகும் 2020 இன் சனி பெயர்ச்சி! யாருக்கெல்லாம் ஆபத்து?

தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் பணி நிறுத்தம்: தாகத்தில் தவிக்கப் போகிறதா சென்னை? – கள நிலவரம்

Back to top button