செய்திகள்

யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமத்தில் அனைத்து பாடசாலைகளும் மீள் அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருதனார்மடம் கொவிட்-19 தொற்றுப் பரவல் கொத்தணியின் பின்னர் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட உடுவில் மற்றும் தெல்லிப்பளை கல்விக் கோட்டப் பாடசாலைகள் நேற்று மூடப்பட்டன.

இந்த நிலையில் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உள்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Source
Sooriyan fm
Back to top button